» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:10:47 PM (IST)
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரங்கள் அணிவித்தார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், மாவட்டக் செயலாளருமான கீதாஜீவன் இன்று தங்க மோதிரங்கள் அணிவித்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றியக் கழக செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர் ரமேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.