» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கனமழை!

செவ்வாய் 28, நவம்பர் 2023 3:18:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. உடன்குடி பகுதியில் பெய்த மழையால் வாரச்சந்தையில் மழைநீர் வெள்ளம் புகுந்தது. 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குலசேரகன்பட்டினத்தில் பலத்த மழை பெய்தது. அங்கு இன்று காலை நிலவரப்படி 60 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

எட்டயபுரம், சூரன்குடி, வைப்பார், விளாத்திகுளம், கீழ அரசடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. உடன்குடி பகுதியில் நேற்று திடீரென பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. மணப்பாடு, சிறுநாடார் குடியிருப்பு, மெய்யூர், தேரியூர், மாதவன்குறிச்சி, பிச்சிவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. கனமழையால் வாரந்தோறும் திங்கட்கிழமை செயல்படும் உடன்குடி வாரச்சந்தைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வியாபாரிகளும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் அவதி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory