» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புகையிலைப் பொருட்களை கடத்திய 3பேர் கைது: 2 இருசக்கர வாகனங்கள், ஆட்டோ பறிமுதல்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 12:12:19 PM (IST)
குலசேகரன்பட்டினம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 3பேரை போலீசார் கைது செய்தனர். 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் திருச்செந்தூர் அமலி நகரைச் சேர்ந்த சக்திவேல் மகன் கணபதி (44), திருச்செந்தூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலை மகன் முனியாண்டி (36) மற்றும் நாசரேத் மூக்குப்பீரி பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் மிக்கேல் ராஜ் (52) மற்றும் சிலர் சேர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் எதிரிகளான கணபதி, முனியாண்டி மற்றும் மிக்கேல் ராஜ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.19,500 மதிப்புள்ள 24 கிலோ புகையிலை பொருட்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










