» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:03:35 AM (IST)

புதூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் பழனி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் பார்த்திபன், சுயம்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி பழனி முருகன் கூறுகையில் "பேரூராட்சி பகுதியில் கால்வாய், பொது மயானம், குடிநீர்வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட சரியான முறையில் பேரூராட்சி நிர்வாகம் செய்யவில்லை என்று பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதாகட்சி சார்பில் பலமுறை மனுஅழித்தும் எந்தவித பயனும் இல்லை என்று கூறினார்.
இதில், பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி, ஓபிசி அணி மாவட்ட செயலாளர் மகேஷ், புதூர் மகளிர் அணி பொதுச் செயலாளர் அஷ்டலட்சுமி, மற்றும் சென்றாய பெருமாள் சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










