» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாலத்தீவில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சாலை மறியல் போராட்டம் வாபஸ்!

ஞாயிறு 26, நவம்பர் 2023 6:05:04 PM (IST)



மாலத்தீவில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் நாளை (நவ.27) அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தருவைகுளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த அக் 1ம் தேதி 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, கடலுக்குள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது புயலின் காரணமாக கடந்த 20.10.2023 அன்று திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்றனர்.  இதையடுத்து 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், மாலத்தீவு எல்லைக்குள் மீன்பிடித்ததாக 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய் அபராதம் கட்டினால் படகுகளை விடுவிக்க முடியும் என்று அந்நாட்டு அரசு கூறி வந்தது.. ஆனால், பல கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டாத நிலையில், நவ 11 அன்று மாலத்தீவில் இருந்து 8 மீனவர்கள் நாடு திரும்பின.. மீதம் உள்ள 4 மீனவர்கள் படகை மீட்பதற்காக அங்குள்ளனர். 

கனிமொழி எம்பி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,   மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் படகை மீட்க வேண்டும் என தருவைகுளம் பொது மக்கள் மனு அளித்தனர். ஆனால் படகு மீட்கப்படவில்லை. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து  உடனடியாக படகை மீட்க வேண்டும் என நாளை 27.11.2023 சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தருவைகுளம் கிராம மக்கள் அறிவித்தனர்..

இந்நிலையில், தருவைகுளம் அருட்தந்தை வின்சென்ட் இல்லத்தில் வைத்து மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர், ஒட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், வருவாய்துறை அதிகாரி வாசுகி, கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, கடலோர அமலாக்க பிரிவு ஆய்வாளர் உமையேரும் பாகம், தருவைகுளம் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர்  பேசிச்சுவார்தையில் ஈடுபட்டனர்..

பேச்சுவார்த்தையின் போது 20 நாட்களில் படகு மீட்கப்படும் என நம்பிக்கை அளித்தனர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாளை நடைபெற இந்த சாலை மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory