» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பூசனூரில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்
ஞாயிறு 26, நவம்பர் 2023 1:22:43 PM (IST)

பூசனூரில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பூசனூரில் 116 ஆவது தேவர் ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவினை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என 60க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என மாட்டுவண்டி போட்டிகளை தொடங்கி வைத்தவர்கள்.
சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசு பூசனூர் மற்றும் சிங்கிலி பட்டி மாட்டு வண்டியும், 2வது பரிசு ஓட்டப்பிடாரம் மாட்டு வண்டி, 3வது பரிசு சொக்கலிங்கபுரம் மாட்டு வண்டியும் பெற்றன. பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசு எட்டயபுரம் மற்றும் கம்பத்து பட்டி மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசு செக்காரக்குடி மற்றும் நொச்சிகுளம் மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசு நொச்சிகுளம் மற்றும் புதூர் பாண்டியாரம் மாட்டுவண்டியும் பரிசுகளை பெற்றன. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










