» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உப்பளங்களில் சிசிடிவி கேமராக்கள் உடைப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

ஞாயிறு 26, நவம்பர் 2023 8:49:50 AM (IST)

பழையகாயல் அருகே உப்பளங்களில் சிசிடிவி கேமராக்களை உடைத்து  சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகே அம்புரோஸ் நகர், பரிபூரணநகர் உட்பட்ட பகுதிகளில் 600 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்ய பாத்திகளில் தண்ணீர் நிரப்புவதற்காக பெரிய அளவிலான மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களில் 30-க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் திருடு போனது. மேலும் காப்பர் மின்வயர்களும் திருடு போனது. இதுகுறித்து கடந்த ஜூன் மாதம் ஆத்தூர் போலீசில் பழைய காயல் உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து காவல்துறை சார்பில் உப்பள பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், இரவு காவலர்களை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி உப்பள பகுதியில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உப்பளத்தில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டும், அதன் வயர்கள், மோடம் போன்ற சாதனங்களை உடைத்தும், வெட்டியும் உப்பள பாத்திகளில் மர்ம நபர்கள் வீசியுள்ளனர். 

மேலும் சில மின்மோட்டார்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் உப்பு உற்பத்தியாளர் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து பழையகாயல் உப்பு உற்பத்தி நலச்சங்க தலைவர் ராஜராஜன் ஆத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory