» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது டிராக்டர் மோதியதில் விவசாயி பலி; உறவினர்கள் போராட்டம்!

செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:06:21 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே பைக் மீது டிராக்டர் மோதியதில் இறந்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (65). விவசாயி. இவரும், அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் கடந்த 29-ந்தேதி வெள்ளூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து ெகாண்டிருந்தனர். புதுக்குடி ரயில்வே கேட் அருகே வந்தபோது, எதிரே ரயில்வே ஒப்பந்த பணிக்காக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் வள்ளிநாயகம், கருப்பசாமி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளிநாயகம் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கருப்பசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரான சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மரணமடைந்த வள்ளிநாயகத்திற்கு செல்லத்தாய் என்ற மனைவியும், கொம்பையா என்ற மகனும், வண்ணமதி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், வடமாநில ஒப்பந்த பணியாளரின் அஜாக்கிரதையால் தான் விபத்தில் வள்ளிநாயகம் மரணம் அடைந்ததாகவும், எனவே வள்ளி நாயகம் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என கோரி அவரது உடலை வாங்க மறுத்து வெள்ளூரில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால், தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory