» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 3 ஆயிரம் ரூபாய்க்கு பைக்குகள் விற்பனை: பொதுமக்கள் அதிர்ச்சி!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 12:01:48 PM (IST)

தூத்துக்குடியில் திருட்டு பைக்குகள் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாமல் மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பைக்குகள் திடீர், திடீரென மாயமாகி வருகிறது. இதன் காரணமாக தினந்தோறும் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன. போலீசார் புகார்களை பெற்றுக் கொண்டு ஒரு சிலருக்கு மட்டும் சி.எஸ்.ஆர் ரசீது கொடுத்து அனுப்புகின்றனர். சிலரை நீங்களே பைக்கை தேடி கண்டுபிடியுங்கள் என்று அன்பாக பேசி அனுப்பி விடுகின்றனர்.

கடந்த ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் பைக்குகள் வெவ்வேறு இடங்களில் திருடு போயுள்ளது. அதில் ஒரு வண்டியை நண்பர் ஒருவர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வண்டியை ஒட்டி வந்தவரை காவல்துறை வசம் ஒப்படைத்தனர். காவல்துறை அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரித்தபோது போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். ஐயா, இந்த வண்டியை என் நண்பரிடம் ரூ 3 ஆயிரம் கொடுத்து வாங்கினேன் என்று கூறியுள்ளார். 

இதே போன்று இருக்கர வாகனங்களுக்கு தகுந்தார் போல விலைகளை வைத்து ஒரு கும்பல் விற்று வருவது தெரியவருகிறது. இது போன்று வாகனங்களை திருடி விற்கும் கும்பல் நெட்வொர்க் ஆக செயல்பட்டு வருகின்றனர். சமீப காலமாக காவல் துறையின் நடவடிக்கைகள் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே உள்ளது. இதனால் வாகனங்களை தொலைத்தவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் இதுபோன்றை பைக்கை வாங்கி பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே, பைக் திருட்டை தடுக்க, இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களை நியமிக்க வேண்டும். காவல்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

மக்கள்Sep 27, 2023 - 07:26:27 AM | Posted IP 162.1*****

"என் நண்பரிடம் ரூ 3 ஆயிரம் கொடுத்து வாங்கினேன்" என்று கூறியுள்ளார். அது எல்லாம் சுத்த பொய் நம்பும்படியாக இல்லை

A. LJoySep 26, 2023 - 01:03:00 PM | Posted IP 172.7*****

இதை எல்லாம் போலீஸ் கண்டு பிடிக்கமாட்டாங்க நம் வண்டி காணமல் போனால் நாம் தான் தேட வேண்டும். என் Bike காணமல் போய் 9 வருடம் ஆச்சு ஒரு தகவலும் இல்லை FIR போடமல் பல நாள் அளைக்களித்து அரசியல்வாதியை கூட்டிக்கொண்டு போனபிறகு தான் FIR போட்டாங்க .... ஒன்டரை வருடம் கழித்து கேசை முடித்துகொண்டால் தான் Insurance கிளைம் செய்ய certificate கொடுத்தார்கள். திவிரமாக தேடுதல் செய்ய தனி காவல் குழு அமைத்து கண்டுபிடிக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory