» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!

புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

தூத்துக்குடியில் மது குடிக்க பணம் தர மறுத்ததால் மனைவியை கணவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி கோமஸ்புரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (42). இவரது மனைவி ஆறுமுககனி (35) அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்வகுமார் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே மனைவியை கத்தியால் குத்தியபோது நெஞ்சு வலி ஏற்பட்டு செல்வகுமார் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory