» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளம் அருகே பயணிகள் நிழற்குடை : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்

வெள்ளி 26, மே 2023 9:10:20 PM (IST)விளாத்திகுளம் அருகே கீழவிளாத்திகுளம் மற்றும் கே.குமரெட்டையாபுரம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடைகளை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவிளாத்திகுளம் ஊராட்சி பருவக்குடி-வேம்பார் சாலையில் தீயணைப்புத்துறை எதிரே 15வது நிதி குழு மானியம் 2021-2022 திட்டத்தின் கீழ் ரூ 6 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் பயணிகள் நிழற்குடையயும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.குமரெட்டியாபுரத்தில் (பட்டியூா்) உள்ளூர் தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பிலான பயணிகள் நிழற்குடையையும் தூத்துக்குடி மாவட்ட எம்பி கனிமொழி கருணாநிதி, தலைமை வகித்து திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்எல்ஏ, கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவராவ், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், தங்கவேல், மாநில நெசவாளர் அணி துணை செயலாளா் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளா்கள் அன்புராஜன், ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, செல்வராஜ், சின்னமாாிமுத்து, மும்மூர்த்தி, பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, கீழவிளாத்திகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், ஒப்பந்ததாரர் பாண்டியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory