» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

வெள்ளி 26, மே 2023 8:37:39 PM (IST)

ஆத்தூர் அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலாத்தூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம் அருகே கடந்த 24.05.2023 அன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மர்மநபர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூததுக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொலையுண்ட நபர் சம்பவ இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். 

இதனையடுத்து அந்த ஹோட்டலின் உரிமையாளரான வடக்கு ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் மோசஸ் அமல்ராஜ் (46) மற்றும் ஹோட்டலில் வேலை பார்க்கும் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது தாஹா (25) ஆகிய 2 பேரும் அந்த நபரிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த நபர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் கொலையுண்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory