» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரி - பேருந்து மோதல்: தலைமைக் காவலர் உட்பட 25பேர் படுகாயம்!

செவ்வாய் 16, மே 2023 5:18:25 PM (IST)



தூத்துக்குடி அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உட்பட 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவில்பட்டிக்கு தனியார் பஸ் இன்று மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த பஸ்ஸில் 62 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் எப்போதும் வென்றான் அருகே உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமம் அருகே முன்னால்  சென்று கொண்டிருந்த சிப்சம் லோடு ஏற்றி சென்ற லாரியின் பின்னால்  அதிவேகமாக மோதியது. இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த  25க்கும் மேற்பட்டபயணிகக்கு  காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

காயம் பட்டவர்களை உடனடியாக போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் எட்டையாபுரம் மற்றும் தூத்துக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பஸ்ஸில் பயணம் செய்த எப்போதுமென்றான் காவல் நிலைய தலைமை காவலர் சாந்த முருகநாதன்  வலது கை மற்றும் இடது கால் முறிவு ஏற்பட்டது. மேலும் காயம் அடைந்த அனைவருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்து தொடர்பாக எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory