» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீண்டும் பேருந்து சேவை : கிராம மக்கள் வரவேற்பு

ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:34:52 AM (IST)கலுங்குவிளை, வரிப்பிலான்குளம், மடத்துவிளை வழியாக மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டதை கிராம மக்கள் வரவேற்றனர். 

திருநெல்வேலியில் இருந்து பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு செல்லும் அரசு பேரூந்து தடம் எண் 137 கடந்த பல வருடங்களாக பேய்குளத்தில் இருந்து மடத்துவிளை, வரிப்பிலான்குளம், கலுங்குவிளை கிராம பகுதிகளுக்கு செல்லாமல், நேரடியாக பேய்க்குளம் சாத்தான்குளம் வழியாக உடன்குடி வரை சென்று வந்தது .இதனை கலுங்குவிளை வழியாக இயக்கப்பட வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலா கார்மல் போனிபாஸ் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும், ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ, கனிமொழி எம்மி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடமும் முறையிடப்பட்டார்.. 

இந்நிலையில் சனிக்கிழமை முதல் திருநெல்வேலியில் இருந்து உடன்குடி செல்லும் தடம் எண் 137 அரசு பேரூந்து பேய்க்குளம் வந்து விராக்குளம், மடத்துவிளை, கோமானேரி, கூவைகிணறு, கலுங்குவிளை, வரிப்பிலான்குளம் வழியாக சாத்தான்குளம், உடன்குடி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையொட்டி சனிக்கிழமை கலுங்கிவிளை வந்த பேருந்துக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் ,கலுங்குவிளை ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலாகார்மல் போனிபாஸ், கோமானேரி ஊராட்சி துணைத்¢தலைவர் ஐக்கோர்ட் துரை, சாலைபாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ் உள்ளிட்ட ஊர்பொதுமக்கள் பங்கேற்றனர். தொட்ந்து இந்த பேருந்து கலுங்குவிளை வழியாக தொடர்ந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த பேருந்து சேவையை மீண்டும தொடங்கிட உத்தரவிட்ட கனிமொழி எம்பி, தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றம் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் மற்றும் திருநெல்வேலி போக்குவரத்து துறை பொது மேலாளர் ஆகியோருக்கு கிராம மக்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் .ப்ரெனிலா கார்மல் போனிபாஸ் நன்றி தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory