» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது

புதன் 22, மார்ச் 2023 3:01:56 PM (IST)

தூத்துக்குடியில் டிரைவரை அரிவாளால் தாக்கி ரூ.35ஆயிரம் பணம் பறித்த வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் குருசாமி (50). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி சென்றார். இரவில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அருகே வந்தபோது, 4பேர் அவரை மறித்து பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்த ரூ.35 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றுவிட்டனர். 

இதில் படுகாயமடைந்த குருசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த பரத் விக்னேஷ் (22), மகராஜா (22) ஆகிய 2பேரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து

ஆண்டMar 22, 2023 - 08:51:38 PM | Posted IP 162.1*****

பரம்பரை திருட்டு நாயா இருப்பான்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory