» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாப்பிள்ளையூரணியில் கிராம சபை கூட்டம்

புதன் 22, மார்ச் 2023 2:52:51 PM (IST)தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிலுவைப்பட்டி ஆர்சி பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வகித்தார். கூட்டத்தில் ஜல் ஜீவன் திட்டம், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் திருநங்கைகள் உள்ளிட்ட இப்பகுதியை சேர்ந்த பலருக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், மின்வாரிய இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை, அதிகாரிகள் ரெங்கதுரை, வாசு, மாப்பிள்ளையூரணி ஆரம்பசுகாதார நிலைய அலுவலர் முகம்மது ஆசீப், கூட்டுறவு ரேஷன்கடை அலுவலர் பிரபாகர், தூத்துக்குடி ஊராட்;சி ஒன்றிய பொதுப்பணித்துறை கட்டிட மேற்பார்வையாளர் முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, தங்கமாரிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory