» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

புதன் 22, மார்ச் 2023 12:27:58 PM (IST)

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து சேதம் ஆனது. பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான காவியா தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று காலையில் வழக்கம் போல் தொழிற்சாலையை திறப்பதற்காக அதன் ஊழியர் ஒருவர் அங்கு சென்றார்.தொழிற்சாலையை திறந்து உள்ளே சென்றபோது தீக்குச்சிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவு காரணமாக தீப்பொறி நெருப்பும், புகையும் மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது தெரியவந்தது. இதனால் அப்பகுதியே புகை மூட்டமானது.

தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் உள்ளே இருந்த தீக்குச்சிகள் மற்றும் தீக்குச்சிகள் அடைக்கும் பெட்டிகள் எந்திரங்கள், மின் சாதன பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீவிபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory