» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

புதன் 22, மார்ச் 2023 10:36:28 AM (IST)

ஏரல் அருகே கணவருடன் பைக்கில் சென்றபோது பெண்ணிடம் 2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி மேல தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பாக்கியலட்சுமி (44). நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் முக்காணியில் இருந்து ஏரலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். உமரிகாடு மெயின் ரோட்டில் செல்லும்போது பின்னால் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் திடீரென பாக்கியலட்சுமி கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலி செயினை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory