» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் காலமானார் : காவல்துறை சார்பில் இறுதி மரியாதை!
புதன் 22, மார்ச் 2023 7:31:09 AM (IST)
தூத்துக்குடியில் உடல்நலக்குறைவால் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு போலீசார் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (56). இவர் கடந்த 1989-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து ஆயுதப்படையில் பணிபுரிந்தார். கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடல், சொந்த ஊரான சாமிநத்தத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
அவரது இறுதி நிகழ்ச்சியில் ஆயுதப்படை டிஎஸ்பி (பொறுப்பு) ஜெயராஜ் தலைமையிலான போலீசார் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்தனர். தொடர்ந்து போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனைமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சங்கரலிங்கம், போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ், வேல்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நங்கையர்மூர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.