» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)
தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கு எந்த வித அறிவிப்பும் இடம் பெறாமல் ஏமாற்றப்பட்டதாக, தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை, சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூட்ட மண்டல பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் காந்திமதி,செயலாளர் வெள்ளத்துரை மற்றும் கந்தசாமி, மாரிமுத்துகுமார், வேலு, காட்வின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அடுத்த கட்டமாக வரும் 28ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட இருப்பதாகவும், அடுத்த மாதம் 19ஆம் தேதி கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த விட இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் பேட்டியளித்த கந்தசாமி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
B@L@Mar 22, 2023 - 09:11:10 AM | Posted IP 162.1*****
நீங்கஅப்படி கஷ்டப்பட்டு ஒன்னும் வேலை பார்த்து கிழிக்க வேண்டாம்..
MyvizhiMar 23, 2023 - 07:42:21 AM | Posted IP 162.1*****