» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு

செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 சவரன் தங்க நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் ராமச்சந்திரன் (74) என்பவர் கடந்த 10.03.2023 அன்று தனது மனைவியுடன் விளாத்திகுளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது  இவரது அத்தையான காமாட்சி (98) என்பவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் வீட்டில் பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். 

இதுகுறித்து மேற்படி ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி  துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த்  தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய  தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் திவீர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த பரமசிவன் மகன் கருவேலமுத்து சங்கர் (22) என்பவர்  மேற்படி ராமச்சந்திரன் வீட்டிற்குள் புகுந்த தங்க நகைகளை திருடி தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கருவேலமுத்து சங்கரை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூ.2லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான 13 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

ஆண்டMar 21, 2023 - 05:33:53 PM | Posted IP 162.1*****

பரம்பரை... திருட்டு பரம்பரை...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory