» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் திருட்டு

செவ்வாய் 21, மார்ச் 2023 11:01:50 AM (IST)

தூத்துக்குடி அருகே லோடு வேனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பூலோகபாண்டி மகன் மாரிமுத்து (31). இவர் சொந்தமாக லோடு வேன் மூலம் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மறவன்மடம் - ராமநாச்சியார்புரம் ரோட்டில் மர டிப்போ முன்பு தனது வாகனத்தை நிறுத்தியிருந்தார். 

மறுநாள் காலையில் வந்தபோது லோடு வேன் திருடுபோயிருந்தது. அதில் மர அறுக்கும் மிஷின் இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.25லட்சம் ஆகும். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

அவனுங்கMar 21, 2023 - 01:05:49 PM | Posted IP 108.1*****

ஆளுங்கதான் திருடி இருப்பானுங்க...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

அரசு பஸ் மோதி கல்லூரி காவலாளி பலி!

திங்கள் 22, ஜூலை 2024 12:52:09 PM (IST)

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory