» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை : யாருக்கெல்லாம் கிடைக்காது?

திங்கள் 20, மார்ச் 2023 5:12:24 PM (IST)

தமிழக அரசின் குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து அமைச்சர் கீதாஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மகளிருக்கான ரூ 1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடைவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதுகுறித்து சமூகநலன் துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், குடும்பத் தலைவிக்கான ரூ 1000 உரிமை தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் பெண்கள் பயனடைய முடியாது. ரூ 1000 உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைய வாய்ப்புள்ளது. இந்த நிதியாண்டில் 6 மாதங்களே உள்ளதால் இந்த திட்டத்திற்கு ரூ 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த உரிமைத் தொகை மற்ற திட்டங்களை போல வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வகுக்கப்படும். இந்த 1000 ரூபாய் மாதந்தோறும் யாருக்கு கிடைத்தால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவியாக இருக்குமோ அந்த நபர்களுக்கெல்லாம் இந்த உதவித் தொகை கிடைக்கும் என கீதாஜீவன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

N. குமார் AtturMar 22, 2023 - 06:23:07 PM | Posted IP 162.1*****

வீட்டிற்கு ஒரு அரசு வேலை கொடுத்து அனைத்து இலவசங்களையும் எடுத்து விடலாம்

VijiMar 22, 2023 - 09:43:46 AM | Posted IP 162.1*****

Love marriage pannavangaluku ration card illa, Nangalam kasata paduromnu Intha government yen teriyamattuku ration card ketta antha formalities Intha formalities nu solluranga ,velai illama ooru oora konja nal irunthu velai pathu kasta paduravangaluku ration card illa niranthara veedu Illa Nangalam enga povom engalukunu government salukai yethuvum kdaikatha athuku yethavathu Muthalvar avarkal solution sonna engalukum helpfulla irukum.

MuruganMar 22, 2023 - 07:19:36 AM | Posted IP 162.1*****

Iwantallricecord

NagarajMar 21, 2023 - 08:22:00 PM | Posted IP 162.1*****

Nanre

M.Ambika.Mar 21, 2023 - 06:27:33 PM | Posted IP 162.1*****

அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும்.

K. Shanmuga Sundara Raj.Mar 21, 2023 - 05:46:59 PM | Posted IP 162.1*****

அரசு அறிவிக்கும் திட்டங்கள், தேவையான மக்களுக்கு தான் சேர வேண்டும். தகுதிவாய்ந்த நபர்களுக்கு அரசின் நல திட்டங்கள் தேவையில்லை. உதாரணமாக ரேஷனில் அரிசி வாங்கும் கார்டு வைத்து இருக்கும் பெரும்பான்மையோர் அரிசி வாங்குவது இல்லை. அந்த அரிசியை பிறர் வாங்கி வெளியே விற்பனை செய்து சம்பாதிக்கிறார்கள் இதனால் அவர்களுக்கும் பயனில்லை. அரசுக்கு நஷ்டம்.பொது மக்களின் வரிப் பணம் வீணாகிறது மற்றும்.அதேபோல் அரசு பொங்கல் விழாவின் போது கார்டு ஒன்றுக்கு ஆயிரம்/ இரண்டாயிரம் ரூபாய் தருகிறது. அதையும் வசதி உள்ளவர்கள் வாங்குகிறார்கள். அதுவும் தவறு. வசதி இல்லாத மக்கள் பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் அரசு பண உதவி செய்கிறது. இவ்வாறு அரசின் நல திட்டங்களை வசதி உள்ளோர் மறுத்து, தேவையானவர் களுக்கு வழங்கினால், அந்த பணத்தை வேறு திட்டங்களுக்கு -- கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்றவற்றிற்கு பயன் படுத்தலாம். அரசியல்வாதிகள் --ஆளும் கட்சியினர் தவறு செய்தால் சாதி, மதம் கடந்து தவறுகளை தட்டி கேட்க வேண்டும். அதை விடுத்து, அரசு மணந்தான் என்று எல்லோரும் வாங்குவது தவறு.

tamilanMar 21, 2023 - 01:16:31 PM | Posted IP 108.1*****

kadaisevaraikum yaruku kidakum endru sollaveillaye??/

சிந்திக்கMar 21, 2023 - 11:21:51 AM | Posted IP 162.1*****

ஆட்சிக்கு வரும்முன் பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் கூறி, ஆட்சிக்கு வந்தவுடன் தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று இப்போதே சொல்லி விட்டார்கள். இது அனைவருக்குமான ஆட்சியா ? தகுதியானவர்களுக்கு மட்டும் ஆட்சியா ?

இலவசம்Mar 21, 2023 - 11:06:56 AM | Posted IP 162.1*****

ஹீ ஹீ ஹீ. கொஞ்ச நாள்ல அப்படியே மின் கட்டணத்தை உயர்த்திவிடுவார்கள். சிலிண்டர் விலையை யாரும் போராடமாட்டார்கள்.

U.P.BOOPATHY.Mar 21, 2023 - 07:13:59 AM | Posted IP 162.1*****

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும்(சர்க்கரை வேண்டாம் கார்டுக்கு தரவேண்டியதில்லை) மகளிர் உதவித்தொகை வழங்கவேண்டும், மக்கள் நம்பிக்கையை பெறவேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory