» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வல்லநாடு அருகே சிவன் கோயிலில் பிரதோச வழிபாடு: தாமிரபரணியில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது !

ஞாயிறு 19, மார்ச் 2023 7:39:01 PM (IST)வல்லநாடு அருகே பழமை வாய்ந்த மேலப்புத்தனேரி மீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயத்தில் பிரதோச விழாவை முன்னிட்டு புனித தீர்த்தம் கொண்டு பூஜை செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே மேலப்புத்தனேரியில் மிகவும் பழமையான மீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் மனநோய் போக்கும் அற்புத ஆலயம். பல வருடங்களாக இந்த ஆலயத்தில் திருப்பணி நடைபெறாமல் இருந்தது. இதனால் ஊர் பொதுமக்களும், பக்த குழுவினரும், கோயிலுக்கு திருப்பணி செய்ய வேண்டும் என பிராத்தனை செய்து வந்தனர். பல்வேறு காலகட்டத்தில் உழவாரப்பணி நடந்தாலும், பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. 

சமீப காலமாக வல்லநாடு உழவாரப்பணி குழு சார்பில் திருப்பணிகள் தொடர்ந்து நடந்தது. அதோடு மட்டுமல்லாமல் சிறப்பாக பிரதோச வழிபாட்டை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். இதற்காக முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இந்த தீர்த்தம் முறப்பநாடு கைலாசநாதர் ஆலயத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின் கீழப்புத்தனேரி நவநீதகிருஷ்ணன் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கீழப்புத்தனேரி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 

பஞ்ச வாத்தியங்கள் முழங்க கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தினை சிவனடியார்கள் சங்கு முழங்க வரவேற்றனர். அதன் பின் சிவன் சக்தி மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பிரதோச வழிபாடு நடந்தது. இதில் ஏரளமான சிவனடியார்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆறுமுகம் உள்பட ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். பூஜைகளை அர்ச்சகர் ஆனந்த் தலைமையில் அர்ச்சகர்கள் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory