» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குடிபோதை நோய் மறுவாழ்வு இல்லம் அடிக்கல் நாட்டு விழா

ஞாயிறு 19, மார்ச் 2023 4:50:24 PM (IST)



தூத்துக்குடி செல்சீனி காலனியில் ‘குடிபோதை நோய் மறுவாழ்வு இல்லம்” அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்சீனி காலனி பகுதியில் இன்று (19.03.2023) தூத்துக்குடி மறைமாவட்ட சார்பாக, மறைமாவட்ட நூற்றாண்டு திட்டத்தின் இறைடியார் சூசைநாதர் ‘குடிபோதை நோய் மறுவாழ்வு இல்ல” அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளவர்களை ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் கண்டறிந்து அவர்களை இந்த குடிபோதை நோய் மறுவாழ்வு இல்லத்தில் தங்கவைத்து, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங் மற்றும் தியானம் போன்றவற்றை அளித்து அவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்தில் நல்ல குடிமகனாக மாற்றுவதற்காக இந்த இல்லம் கட்டப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ், பெங்க@ர் செபமாலைதாசர் சபை உயர்தலைவர் ஜஸ்டின் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவன் கோவில் குருக்கள் சிவகுமார், மணிகண்டன், வார்டு கவுன்சிலர் வைதேகி, பரதர் நலச் சங்க தலைவர் ரெனால்ட் வில்லவராயர் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர்கள் சிவகுமார், முகிலரசன், முத்தமிழரசன், பயிற்சி உதவி ஆய்வாளர் ராமலெட்சுமி, தனிப்பிரிவு தலைமைக் காவலர் மாரிக்குமார் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மயில்கள் மர்ம சாவு: வனத்துறை விசாரணை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:52:29 PM (IST)

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory