» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெயிலின் தாக்கத்தால் பெண் பரிதாப சாவு

ஞாயிறு 19, மார்ச் 2023 12:28:55 PM (IST)

விளாத்திகுளம் அருகே வெயிலின் தாக்கத்தால் மிளகாய் பழம் பறிக்கச் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம்,  விளாத்திகுளம் அருகே உள்ள ஏ.சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த போத்திராஜ் என்பவரது மனைவி மங்களஈஸ்வரி (35). இவர்களுக்கு பவித்ரா(3) என்ற மகள் உள்ளார். மங்களஈஸ்வரி  விளாத்திகுளம் அடுத்துள்ள ராமச்சந்திரபுரம் கிராமத்தில் விவசாய கூலி வேலைக்கு மிளகாய் பழம் பறிப்பதற்காக சென்றுள்ளார். 

மதியம் 2 மணி அளவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தனக்கு தலை சுற்றுவதாக கூறிவிட்டு அருகே உள்ள மரத்தின் அடியில் ஓய்வெடுப்பதற்காக சென்று அமர்ந்துள்ளார். ஆனால் அந்த இடத்திலேயே மங்கள ஈஸ்வரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதிகபடியான வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்த மங்கலஈஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory