» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முறையாக இயங்காத தனியார் பஸ்கள் உரிமத்தை ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

வெள்ளி 17, மார்ச் 2023 4:12:02 PM (IST)தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதியில் முறையாக இயங்காத தனியார் பஸ்களின் உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி வழியாக செல்லும் தனியார் பஸ்கள் அரசு நிர்ணயித்த நேரங்களில் செயல்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கிராமமக்கள் திருச்செந்தூர் கோவில் மற்றும் இரவு நேரங்களில் தூத்துக்குடி மற்றும் ஏரலில் இருந்து ஊர் திரும்ப முடிவதில்லை. வசந்த விளாஸ் பஸ் காலை 5மணிக்கு சேர்வை காரன்மடம் வழியாக தூத்துக்குடி செல்வதில்லை.  இப்பேருந்து தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் காலை 6.15 மணிக்கு வருவதில்லை. இரவு 9.00மணிக்கு ஊராட்சி வழியாக தூத்துக்குடி சென்று பின் இரவு 11.00மணிக்கு ஊராட்சி வழியாக ஏரல் செல்வதில்லை. 

தனியார் பேருந்து சரோஜ் செல்வம், காலை 6.45 மணிக்கு ஊராட்சி வழியாக தூத்துக்குடியிலிருந்து நாசரேத் செல்லும் சரோஜ் செல்வம் பேருந்து இயங்குவதில்லை. இரவு ஊராட்சி வழியாக 9:30 மணிக்குதூத்துக்குடி செல்லுவதில்லை. மேலும், RBS1 பேருந்து இரவு நேரம் சுப்பிரமணியபுரத்திலிருந்து 8மணிக்கு ஊராட்சி வழியாக தூத்துக்குடி செல்லும் பேருந்து இயங்குவதில்லை. திரும்ப தூத்துக்குடியில் இருந்து 9:30க்கு ஊராட்சி வழியாக சுப்பிரமணியபுரம் செல்வதில்லை. இரவு திரும்ப 10மணிக்கு ஊராட்சி வழியாக தூத்துக்குடி செல்வதில்லை. எனவே முறையாக இயங்காத தனியார் பேருந்துகளின் உரிமைத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

ராஜாMar 19, 2023 - 03:48:34 AM | Posted IP 162.1*****

மதுக்கடைகளை மூடுதலும் இதற்கொரு தீர்வாகும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory