» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது...!

சனி 25, பிப்ரவரி 2023 9:57:03 AM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலகலமாகத் தொடங்கியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

பின்னர் காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. 12 நாட்களுக்கு நடக்கும் இந்த திருவிழாவில் தினந்தோறும் சாமி உற்சவம் உள்ளிட்ட முக்கிய பூஜைகள் நடைபெறுகின்றன.

வருகிற மார்ச் 4-ம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11.30 மணிக்கு பச்சை சாத்திபச்சைநிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கிறார்.

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் 6-ம் தேதியன்று நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 7-ம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகித்தனர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

Murugan adimaiFeb 25, 2023 - 03:22:05 PM | Posted IP 106.2*****

Tiruchendur murugaru.kku arogara

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory