» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிஎம் கிசான் திட்டத்தில் 13வது தவணை தொகை பெற வங்கிகணக்கு: அஞ்சல்துறை அழைப்பு

புதன் 8, பிப்ரவரி 2023 8:31:04 PM (IST)

பிஎம் கிசான் திட்டத்தில் 2000 ரூபாய் தவணைத் தொகையைப் பெற அஞ்சல்துறை உதவுகிறது.

தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி’ திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், இந்த மாதம் வழங்கப்பட உள்ள 13வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிகணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள் / தபால்காரர் / கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையிலிருந்து பெறப்பட்ட தகவலின் படி தமிழ்நாட்டில் 3.17 லட்சம்விவசாயிகளும்,  தூத்துக்குடி மாவட்டத்தில் 6815 விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிகணக்கு இல்லாமல் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல்துறையின் கீழ்செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி துவங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும்பயன்படுத்தி e-KYC (விரல் ரேகை மூலம்) மூலம் ஒருசிலநிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிகணக்கு துவங்கமுடியும்.

இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்சலகங்கள்/ தபால்காரர்/ கிராமஅஞ்சல்ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கிகணக்கு துவங்கி பயன்பெறுமாறு அஞ்சல்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்றிற்கு ரூ.6000/- வழங்கும் ‘பிரதம மந்திரி கிசான் சம்மன்நி தி' என்ற திட்டம் 2018-ஆம்ஆண்டில்துவங்கப்பட்டது. ஒவ்வொருஆண்டும் 3 தவணையாக (ரூ.2000/-வீதம்) இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கிகணக்கில் நேரடியாக வரவுவைக்கப்படுகின்றது. திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை 12 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory