» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிய சிமெண்ட் சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

புதன் 8, பிப்ரவரி 2023 12:37:39 PM (IST)தூத்துக்குடியில் கருத்த பாலம் முதல் வட பத்திரகாளியம்மன் கோவில் வரை நடைபெற்று வரும் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி கருத்த பாலம் முதல் வட பத்திரகாளியம்மன் கோவில் வரை நடைபெற்று வரும் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளையும் மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சவேரியானா மைதானம் பின்புறம் உள்ள வடிகாலானது தூர்ந்து போய் பல ஆண்டுகளாக வடிகாலின் வழியாக நீர் செல்வதற்கு மணல் திட்டுகளும் அமலைச் செடிகளும் தடையாக இருந்தது.தற்போது அங்கே நடைபெற்று வரும் புதிய வடிகால்  பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.

இதேபோல மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால், குடிநீர் குழாய் பணிகள் மற்றும் பணிகள் நிறைவடைந்த பண்டு கரை சாலையினை பார்வையிட்டார். அங்கு போக்குவரத்திற்கு இடையூராக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க உத்தரவிட்டார். மேலும் அந்த சாலையில் தேவையான இடங்களில் அகலப்படுத்தவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், மாநகர கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள். உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

MauroofFeb 9, 2023 - 07:22:48 PM | Posted IP 162.1*****

அடிப்படை வசதிகள் விதிகளின் பிரகாரம் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் நின்றுவிடாமல் அவை முறையாக பராமரிக்கப்படுதல் மிக மிக அவசியம். அதுதான் நம் நாட்டில் மிகப்பெரிய தட்டுப்பாடு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory