» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தினால் நடவடிக்கை: போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

திங்கள் 6, பிப்ரவரி 2023 8:45:53 PM (IST)

போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பொருத்தி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "துணைப்போக்குவரத்து ஆணையர், திருநெல்வேலி உத்தரவின்படி, தூத்துக்குடி பகுதிகளில் இயங்கும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள், அதிக ஒலி எழுப்பும் பலகுரல் ஒலிப்பான்கள், மாற்றி அமைக்கப்பட்ட கேன்டில்பார்கள் மற்றும் தலைகவசங்களில் கேமரா பொருத்தி இயக்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் அபராதமாக ரூ. 10000 வசூலிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், இலகுரக நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டுநர் மற்றும் முன் இருக்கை, பின் இருக்கையிலிருந்து பயணிப்பவர்களும் கட்டயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும்; என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படும். இது குறித்து இனிவருங்காலங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து

prabhuFeb 7, 2023 - 05:54:48 AM | Posted IP 162.1*****

இதுபோல் வாகனங்களில் முகப்பு விளக்கை(Headlight) தவிர்த்து அதிக விளக்குகள் பொருத்தப்படுவதையும் தடை செய்யவும்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory