» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது: செல்போன், கத்தி பறிமுதல்!.

ஞாயிறு 4, டிசம்பர் 2022 7:13:48 PM (IST)

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வன், முதல் நிலைக் காவலர் பாலகுமார், காவலர்கள் மாதவன், மரியஜெகதீஷ் மற்றும் ஜான்சன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆனந்தநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பொன் உதயா (21) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 6 கிராம் கஞ்சா, செல்போன், கத்தி மற்றும் ரூ.2,100 பணத்தை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory