» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஞாயிறு 4, டிசம்பர் 2022 6:44:06 PM (IST)விளாத்திகுளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.

விளாத்திகுளம் தொகுதி திமுக இளைஞரணி சார்பில் நடத்த மினி மராத்தான் போட்டியை விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைத்து எம்எல்ஏ மார்க்கண்டேயன் துவங்கி வைத்தார். பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை விளாத்திகுளம் அரசும் மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகாவும், இரண்டாம் பரிசு ரூ.14 ஆயிரத்தை புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலாவும், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவி கனகலட்சுமியும் பெற்றனர்.

ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை காட்டுநாயக்கன் பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் மனோஜ் குமார் இரண்டாம் பரிசு ரூ.14 ஆயிரத்தை அதே பள்ளியைச் சேர்ந்தவா் முகேஷ்,மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரத்தை ரெட்டியார்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் பெற்றனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, காசி விஸ்வநாதன், நவநீதகண்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory