» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீனவரை கல்லால் தாக்கி கொல்ல முயற்சி: இளஞ்சிறார் உட்பட 2பேர் கைது
ஞாயிறு 4, டிசம்பர் 2022 11:22:26 AM (IST)
தூத்துக்குடியில் மீனவரை கல்லால் தாக்கி கொல்ல முயன்றதாக இளஞ்சிறார் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தருவைகுளம், நவமணி நகரை சேர்ந்தவர் தாசன் மகன் அமல்ராஜ் (29). மீனவரான இவருக்கும் தாளமுத்து நகர், ஜே.ஜே., நகரைச் சேர்ந்த முருகன் மகன் செண்பகராஜ் (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று டி.சவேரியார்புரத்தில் நடந்த திருவிழாவில் அமல்ராஜ் தனது அண்ணன் அந்தோணி மைக்கேல் என்பவருடன் நின்று கொண்டிருந்தாராம்.
அப்போது அங்குவந்த செண்பகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அமல்ராஜை சரமாரியாக கல்லால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த அமல்ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, செண்பகராஜ் மற்றும் ஒரு இளஞ்சிறாரை கைது செய்தார். மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
