» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குரூப் 2 முதன்மைத் தேர்வுகான இலவச பயிற்சி: டிச.3ஆம் தேதி துவங்குகிறது

வியாழன் 1, டிசம்பர் 2022 8:08:22 PM (IST)

தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்விற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-II (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 5,446 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முதன்மைத்தேர்வு 25.02.2023 அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ளது. 

முதன்மைத் தேர்வுகான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நேரடி வகுப்புகளாக 03.12.2022 அன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்ப வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கோரம்பள்ளத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

எனவே மேற்குறிப்பிட்டுள்ள போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள நகலுடன் தங்களது ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு (0461 - 2340159) முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

AjithkumarDec 2, 2022 - 04:29:02 PM | Posted IP 162.1*****

hi, I'm have will learn Tnpsc main study material

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory