» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- போலீசார் விசாரணை

வியாழன் 1, டிசம்பர் 2022 12:22:43 PM (IST)

உடன்குடி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (57). விவசாயி. இவரது மனைவி சத்யவதி (50). இவர்களது மகள் சந்தியா (27). இன்று காலை வெகு நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது ரகுபதி, சத்யவதி, சந்தியா ஆகிய 3 பேரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர்.

இதையடுத்து அவர்கள் மூவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தியாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரிகரசுதன் என்பவருடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. அரிகரசுதன் சென்னை போரூரில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். 

அங்கு வியாபாரம் சரியாக இல்லாமல் நஷ்டம் அடைந்ததால் அரிகரசுதனும், சந்தியாவும் ஊருக்கு வந்து விட்டனர். பின்னர் அரிகரசுதன் உடன்குடி அனல்மின் நிலையத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து அரிகரசுதன் மனைவியுடன் கோபித்துக்கொண்டு நேற்று நான் சென்னை செல்வதாக கூறி சென்றுள்ளார். இதனால் சந்தியா மற்றும் அவரது குடும்பத்தினர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டது தெரியவந்தது. எனவே இந்த சம்பவத்தில் விரக்தி அடைந்து 3 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory