» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1.82 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்

வெள்ளி 25, நவம்பர் 2022 5:34:55 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த யாதுமானவள் வழிகாட்டுதல் கருத்தரங்கில் ரூ.1.82 லட்சம் மதிப்பிலான பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவிகளுக்கான யாதுமானவள் வழிகாட்டுதல் கருத்தரங்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை வகித்தார். யாதுமானவள்  திட்ட இயக்குனர் விஜயகுமாரி, ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ஜெயலதா வரவேற்றார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.

சிறப்பு பேச்சாளர் ஜெயந்த ஸ்ரீபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யாதுமாணவள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவி டாக்டர் கமலா மாரியம்மாள் சார்பில் புரொஜெக்டர் வாங்குவதற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், முன்னாள் மாணவிகள் சங்கத்தின் சார்பில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான ஜெராக்ஸ் மிஷினும், ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் நாராயணசாமி தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ஷூ வாங்குவதற்கு ரூ.7500ம் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துச்செல்வன், வெங்கடேஷ், சீனிவாசன்,முத்து முருகன், மாரியப்பன், கிருஷ்ணசாமி, குணசேகரன், நாராயணசாமி, வீராச்சாமி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ரூத்ரத்னகுமாரி, சீனிவாசன், கண்ணன், இசை ஆசிரியை அமல புஷ்பம், தமிழ் ஆசிரியை கெங்கம்மாள் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி  சங்க செயலாளர் மணிகண்டமூர்த்தி நன்றி கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory