» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வணிக சங்க பேரமைப்பின் சிறப்பு கூட்டம் : விக்கிரமராஜா பங்கேற்பு!

வியாழன் 24, நவம்பர் 2022 12:38:41 PM (IST)தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சிறப்பு கூட்டம் புதுக்கோட்டை சத்யா ரிசார்ட்டில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் டி.சோலைராஜா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பி.வெற்றிராஜன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கன்னியாகுமரி மண்டலத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, தென்காசி மாவட்ட பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளராக சுகன்யா. எஸ்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டார். கன்னியாகுமரி மண்டல செயற்குழு கூட்டம் வரும்  டிசம்பர் 15 ஆம் தேதி தூத்துக்குடியில் வைத்து சிறப்பாக நடைபெறும் என்றும், டிச. 20 கோவையில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக திரளான வணிகர்கள் கலந்து கொள்வது என்றும்  என கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.மகேஷ்வரன், பொருளாளர் ஏ.ஆர்.ஆனந்த பொன்ராஜ், தொகுதிச் செயலாளர் ஏ.ஆனந்தராஜ், மகளிரணி பி.ராஜம், இளைஞரணி பட்டு, வ.உ.சி. மார்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க செயலாளர் செந்தில்குமார், வ.உ.சி. காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சாமி, 3ஆம் மைல் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபாலன், புதுக்கோட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் பீட்டர், சேதுபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் திருமால், திருச்செந்தூர் ரோடு வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள் மகேஷ் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory