» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2வது நாளாக போராட்டம் :

வியாழன் 24, நவம்பர் 2022 11:17:21 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 2வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் ஒட்டுமொத்த சிறுவிடுப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. 

இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்கிறது. மாவட்டத்தில் சுமார் 1300 பணியாளர்கள் உள்ளனர். இதில் 290பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 14 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory