» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வழிப்பறி: 4 திருநங்கைகள் கைது

வெள்ளி 18, நவம்பர் 2022 11:08:37 AM (IST)தூத்துக்குடியில் பொதுமக்கள் இருவரை தாக்கி செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து கொள்ளையில் ஈடுபட்ட திருநங்கைகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதுபோன்று சட்ட விரோத செயலில் ஈடுபடும் திருநங்கைகள் குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர்நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன் ஜெகதீசன் (65) என்பவர் கடந்த 16.11.2022 அன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சில திருநங்கைகள் ஜெகதீசனிடம் பணம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த திருநங்கைகள் ஜெகதீசனை தாக்கி அவரது பைக் மற்றும் சாவியையும் பிடுங்கியுள்ளனர். மேலும் அங்கு இருந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த ஷரிப்புதின் மகன் சசீருதின் (33) என்பவரையும் அடித்து அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து  ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் அவர்கள் மேற்பார்வையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மேற்படி இருரையும் தாக்கி இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்வம் மகள் யாசினி (எ) அபினேஷ் (19), காயல்பட்டிணத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகள் பென்னிலா (எ) செல்வகணபதி (25), தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் சில்பா (எ) முத்துராஜ் (19) மற்றும் பாளையங்கோட்டை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சக்திவேல் மகள் பாவனா (எ) சரவணகுமார் (21) ஆகிய திருநகங்கைகள் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் திருநங்கைகள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் மற்றும் ரூ.12,000 மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் குறித்து பொதுமக்கள் அவசர போலீஸ் தொலைபேசி எண். 100 மற்றும் 95141 44100 என்ற எண்ணிற்கு தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

BaskarNov 20, 2022 - 06:38:20 PM | Posted IP 162.1*****

பிற மாவட்டத்தை விட தூத்துக்குடியில் தான் இவர்கள் அட்டுழியம் அதிகம்... காவல் துறை உடனடியாக இவர்களை அடக்க வேண்டும்

கணபதி மாNov 19, 2022 - 10:22:58 PM | Posted IP 162.1*****

இவர்களை கைது செய்து விசாரணைக்கு பின் கோர்ட்டில் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். விடக்கூடாது காவல்துறை.

Eesan m SureshNov 19, 2022 - 09:15:31 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி டூ புதூர்பாண்டியாபுரம் செல்லும் சாலையில் மாப்பிள்ளையூரனி விளக்கில் இருந்து நிலா சீட்புட்ஸ் பாலம் இடையில் நிறைய திருநங்கைகள் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை வழிமறித்து பணம் மற்றும் செல்போன் நகைகள் உள்ளிட்டவை பிறக்கிறார்கள். தினமும் காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து செல்ல வேண்டும்.. அதுமட்டுமின்றி சிலர் கஞ்சா குடிபோதையில், மனைவி மற்றும் மகள்களை அழைத்து செல்லும் பைக்கில் செல்பவர்களை வழிமறித்து ப்ளாக் மையில் செய்வதும் தொடர்ந்து நடக்கின்றது. குறிப்பாக புதூர்பாண்டியாபுரம் டூ புதியம்புத்தூர் செல்லும் வழியில் முகம் தெரியாத நபர்களால் பலர் தாக்க படுவதும் வழிமறித்து பணம் பெறுவதும் நடக்கின்றது... இதனை புகார் அளிக்க சென்றால் வீண் அலைச்சல் நம்மலதான் ஓயாமல் காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை செய்வார்கள் ஏன் வீண் அலைச்சல் என்று புகார் அளிக்காமல் விட்டு விடுகின்றனர்....

Eesan m SureshNov 19, 2022 - 09:15:26 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி டூ புதூர்பாண்டியாபுரம் செல்லும் சாலையில் மாப்பிள்ளையூரனி விளக்கில் இருந்து நிலா சீட்புட்ஸ் பாலம் இடையில் நிறைய திருநங்கைகள் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை வழிமறித்து பணம் மற்றும் செல்போன் நகைகள் உள்ளிட்டவை பிறக்கிறார்கள். தினமும் காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து செல்ல வேண்டும்.. அதுமட்டுமின்றி சிலர் கஞ்சா குடிபோதையில், மனைவி மற்றும் மகள்களை அழைத்து செல்லும் பைக்கில் செல்பவர்களை வழிமறித்து ப்ளாக் மையில் செய்வதும் தொடர்ந்து நடக்கின்றது. குறிப்பாக புதூர்பாண்டியாபுரம் டூ புதியம்புத்தூர் செல்லும் வழியில் முகம் தெரியாத நபர்களால் பலர் தாக்க படுவதும் வழிமறித்து பணம் பெறுவதும் நடக்கின்றது... இதனை புகார் அளிக்க சென்றால் வீண் அலைச்சல் நம்மலதான் ஓயாமல் காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை செய்வார்கள் ஏன் வீண் அலைச்சல் என்று புகார் அளிக்காமல் விட்டு விடுகின்றனர்....

தனி ஒருவன்Nov 19, 2022 - 07:52:43 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் முன் இருக்கும் திருநங்கை மிக மோசம் .... சில்லறை இல்லை என்றாலும் விடுவதில்லை ...சில்லறை தருகிறேன் என்று கூறி பின் தரமால் போயே விடுகிறார்கள் ... எதிர்த்து கேட்டால் அவர்கள் சங்கம் வந்து கேவலம் செய்து விடுவார்கள் என்ற அச்சத்தினால் நாமும் சரி போனால் போகட்டும் என்று கடந்து செல்கிறோம் ...தூத்துக்குடி உயர் அதிகாரி...அவர்கள் காவல் துறையை இரவு நேரத்தில் புதிய பேருந்து நிலையம் பணி செய்ய சொல்ல வேண்டும் இரயில்வே தண்டவாளங்களில் அவர்கள் செய்யும் செயல் காண்போரை எரிச்சல் அடைய செய்கிறது ...அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர் அங்கிருந்து புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தண்டவாளத்தை பார்த்தால் திருநங்கை செய்யும் செயலால் அவசர வேலைக்கு கூட வெளியில் செல்ல முடியாத காலம் ஆகிவிட்டது .....அவரகளை எங்கையவாது பணி செய்து பிழைக்க சொல் பேருந்து நிலையம் கோவில் பொது இடம் என மொத்தமாக அழைய அனுமதிக்க சொல்லாதிரகள் ....புதிய பேருந்து நிலையம் தண்டவாளம் திருநங்கை உல்லாச வளம்

Muthu Vasanthi SNov 19, 2022 - 07:24:01 PM | Posted IP 162.1*****

எங்கு பார்த்தாலும் இவர்கள் தொல்லை தாங்க முடியல..கோயில்,பஸ் ஸ்டான்ட், ஜவுளிக்கடை எங்கு பார்த்தாலும் காசு கேட்டு தொல்லை பண்றாங்க..இவர்களுக்கு யார் இந்த அனுமதி கொடுத்தது..பஸ்ஸிலோ, கோவிலுக்கோ போகவே பயமாக உள்ளது.இவர்களுக்கு பயந்து வெளியில் செல்வதை குறைத்தே விட்டேன்..காவல்துறை இவர்களை பஸ், கோவிலுக்கோ அனுமதி அளிக்க கூடாது..காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். .

NameNov 19, 2022 - 06:31:33 PM | Posted IP 162.1*****

Ithukaluku Thiru nangai nu name vera

Senthil kumarNov 19, 2022 - 02:35:45 PM | Posted IP 162.1*****

காவல்துறை தொடர்த்து கன்காணிக்க வேண்டும்

Sofiya transgenderNov 19, 2022 - 10:01:13 AM | Posted IP 162.1*****

Thappu panna thandana kidachi tha thirum, makkal kodukum panathai anbudan vanguvathu alagu, athigram kondu parika kudathu athu kollai ,valipariyil edupadum, inimel thirunthuvargal endru nambungal, thoothukudi ipadi mosamana sambavam velia varuvathai parkinren , thoothukudi thirunangai sofiya artist ,

RaamuNov 19, 2022 - 09:15:47 AM | Posted IP 162.1*****

காவல் 5துறைக்கு நன்றி... சென்னை very worst

சமூக ஆர்வலர்Nov 19, 2022 - 09:14:55 AM | Posted IP 162.1*****

கைது செய்து நாடு கடத்த வேண்டும். இல்ல அந்த naaykalukku ஒரு வேளை ரெடி பண்ணி மதம் 8000 food,accomofree

MarimuthuksthirvelNov 19, 2022 - 08:36:30 AM | Posted IP 162.1*****

Police should made road patrol

FaizalNov 18, 2022 - 11:22:43 PM | Posted IP 162.1*****

தினமும் மாலை 4 மணியளவில் ஏவிஎம் மருத்துவமனை முன்புறம் உள்ள மக்கள் நடந்து செல்லும் பிளாட் ஃபார்ம் ல் 15,16வயது மதிக்கதக்க திருநங்கைகள் நடந்து வருகிற மக்களிடையே செய்யும் செயல்கள் அருவருக்கத்தக்க தாக உள்ளது.. ❌❌❌காவல்துறை கவணம் கொள்ள வேண்டும் ❌❌❌

P.S. RajNov 18, 2022 - 07:00:36 PM | Posted IP 162.1*****

பதிவாளர் திரு. ராமநாத பூபதி அவர்கள் சரியாக கருத்து பதிவிட்டிருக்கிறார். திருநங்கைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பழைய பேருந்து நிலையத்தில் பஸ்களில் நுழைந்து இவர்கள் செய்யும் செயல்கள் மக்களை முகம் சுளிக்க வைக்கின்றன. காவல்துறை இவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.

மக்கள்Nov 18, 2022 - 06:42:36 PM | Posted IP 162.1*****

காசு இல்லை என்று சொன்னால் பேசாமல் போனும், இந்த கருமம் எல்லாம் உழைக்காமல் ராத்திரி மட்டும் வருது?

ராமநாதபூபதிNov 18, 2022 - 03:39:25 PM | Posted IP 162.1*****

சின்னத்துரை அன் கோ மற்றும் அந்த பிரதான சாலையில் அங்கிருந்து கிழக்கே தங்கமயில் வரை இவர்களது தொந்தரவு நாளுக்கு நாள் பெருகுகிறது. குடும்பமாக கடைவீதிக்கே செல்லவே பயமா இருக்கிறது, அவர்களுக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லை. ஆனால் இவர்களது நடவடிக்கைகள் கடைவீதியில் நம்மை தலைகுனிய வைக்கிறது

thoothukudi makalNov 18, 2022 - 11:18:05 AM | Posted IP 162.1*****

itharku oru niranthara thirvu vendum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory