» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஒரு வழிப்பாதையில் செல்லும் லாரிகள் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

சனி 24, செப்டம்பர் 2022 12:09:33 PM (IST)தூத்துக்குடியில் விதிகளை மீறி ஒருவழிப் பாதைக்குள் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி நகராட்சியை மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். துவக்கி வைத்து 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை காவல்துறை ஆணையரகம் அமைக்கப்படாத நிலை உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியை வடக்கு தெற்கு என பிரிக்கும் வகையில் பக்கிள் ஓடை நகரை நடுவில் அமைந்து உள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சியின் எல்லையில் இருந்து சில மீட்டர் தூரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்து உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி எல்லையில் இருந்து துவங்கும் சாலையில்தான் அரசு  மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீதிமன்றம், தென்பாகம் காவல் நிலையம், மாநகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம், மத்திய பாகம் காவல் நிலையமென அனைத்தும் ஒரே சாலையில் அமைந்து உள்ளது. 

இதனை தொடர்ந்து கடற்கரை சாலையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் என அமைந்து உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், சிப்காட், முத்தையாபுரம், தெர்மல்நகர், அனைத்து மகளிர் காவல் நிலையம், குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் உள்ளது. இவை அனைத்தும் துணை காவல்துறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை ஒரு போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் என மொத்தம் 30 இருப்பதாக காவல்துறை தெரிவிக்கின்றது. தூத்துக்குடி மாநகராட்சியாக இருந்தாலும் கூட குறுகலான சாலைகளால் போக்குவரத்து பிரச்சினை பிரதான தலைவலியாக உள்ளது. மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை கொண்டு போக்குவரத்து சரி செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் 33 ஆயிரத்து 414 கார்களும், 42 ஆயிரத்து 317 இருச்சக்கர வாகனங்களும் உள்ளதாக வட்டார போக்குவரத்து கழகத்தில் தகவல் தெரிவிக்கின்றது. இதிலும் மாநகராட்சியின் சில பகுதிகள் ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்டு உள்ளதால் வாகனங்களின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும். தூத்துக்குடி மாநகராட்சியில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் நகரின் தெற்கு பகுதியிலேயே அமைந்து உள்ளது. வட பகுதியில் கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் கூட தென்பகுதியில் தான் அதிகளவில் பள்ளிகள், கல்லூரிகள் அமைந்து உள்ளது.

தூத்துக்குடி நகருக்குள் நெருக்கம் மிகுந்த நேரத்தில் கனரக வாகனங்கள் வர அனுமதி இல்லை என போர்டு வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் பிற்பகல் 4 முதல் இரவு 8 வரையிலும் கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை காவல்துறை சார்பில் வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கூட இதை எல்லாம் கண்டு கொள்வதில்லை கனரக வாகனங்கள். 

குறிப்பாக பள்ளி செல்லும் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி போக்குவரதுக்கு இடையூறை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உயரமான சரக்கு பொதிகளை ஏற்றி வருவதால் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் அச்சத்துடனே சென்று வரும் நிலை உள்ளது. பீக் அவர்சில் ஏன் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்துவதாக கேட்டால் கனரக வாகனத்தில் இருப்பவர்கள் மிரட்டும் தொனியில் ஈடுப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

TN 69Sep 24, 2022 - 09:43:30 PM | Posted IP 162.1*****

ஒரு வழிச்சாலைகள் அனைத்தையும் இருவழி சாலைகளாக விரிவாக்கம் செய்து தரம் உயர்த்தப்பட்டால் அல்லவா மாநகராட்சி தரம் உயர்த்தியதற்க்கு அடையாளம். தூத்துக்குடி நகராட்சியாகவே உள்ளது. 1986ல் உள்ளது போல் இன்றும் 2022லும் அப்படியே உள்ளது. இங்குள்ள தெருக்களின் பெயரும், ரோடுகளின் பெயரும் தான் மாறியுள்ளது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத தூதூதூத்துக்குடி

RamsSep 24, 2022 - 07:24:38 PM | Posted IP 162.1*****

Wgc road announced as one way. But daily upto 0900 hrs all vechicles including buses are moving towards west. Always two wheelers users are going in wrong direction

ஆசீர். விSep 24, 2022 - 04:50:43 PM | Posted IP 162.1*****

பயன்படுத்தாத பழைய கார்களை நிறைய தெருக்களில் இடைஞ்சலாக நிறுத்தியுள்ளனர் நிறைய பேர். அதெல்லாம் பறிமுதல் செய்து ஏலம் விடவேண்டும். சாலையை சீர்செய்யவேண்டும்

MASSSep 24, 2022 - 03:04:23 PM | Posted IP 162.1*****

iruukkatu.....

அது மட்டுமல்லSep 24, 2022 - 12:32:19 PM | Posted IP 172.7*****

புதிதாக சிமெண்ட் சாலை அமைத்த எல்லா ரோட்டில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி விடுகிறார்கள் .

தூத்துக்குடிSep 24, 2022 - 12:23:16 PM | Posted IP 162.1*****

நடவடிக்கை இருக்குமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory