» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் பரிதாப சாவு

வெள்ளி 23, செப்டம்பர் 2022 8:23:34 PM (IST)

காயல்பட்டினம் அருகே படகில் தவறி விழுந்து படுகாயம் அடைந்த  மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அருகே சிங்கித்துறை கடற்கரையில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் ஜெனக்ஸ்டன் (23) என்பவர் உள்பட மீனவர்கள் 3பேர் நாட்டுப்படகியில் இன்று அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். பின்னர் காலை 11 மணியளவில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஜெனக்ஸ்டன் தடுமாறி படகில் குப்புற விழுந்துள்ளார். 

இதில் மார்பு, நாடி, முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சக மீனவர்கள் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கவனே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மரைன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory