» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிப்காட் விரிவாக்கம்: ஆட்சியர் நேரில் ஆய்வு

வியாழன் 22, செப்டம்பர் 2022 3:44:27 PM (IST)தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சிப்காட் விரிவாக்கத்திற்கு தேவையான இடங்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலத்தட்டப்பாறை பகுதி, கீழத்தட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்ட உப்பாத்து ஓடைகள் ஆகிய பகுதிகளிலும், சில்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நயினார்புரம் பகுதியிலும் சிப்காட் விரிவாக்கத்திற்கு தேவையான இடங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கீழத்தட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பள்ளிக்கு செல்ல பேரூந்துக்காக காத்திருந்த மேலத்தட்டப்பாறை, ஊராட்சி ஒன்றியம் பள்ளி மாணவர்களிடம், பேருந்து வசதிகள் குறித்தும், பள்ளி வகுப்பு தொடங்கும் கால நேரம் குறித்து கேட்டறிந்ததோடு மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கீழத்தட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிக்கு சென்று அங்கு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கியது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்ததோடு, மாணவர்களிடமும் காலை உணவு வழங்கப்பட்டது குறித்து பரிவுடன் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் (சிப்காட்) லதா, சிறப்பு வட்டாட்சியர் (நிலம்) பிரபாகரன், வட்டாட்சியர்கள் சிவக்குமார், அமுதா, அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory