» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட 3பேர் பலி : 6பேர் காயம்!

ஞாயிறு 28, ஆகஸ்ட் 2022 12:25:15 PM (IST)

தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உட்பட 3பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 6பேர் காயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெத்து ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனது மனைவி சங்கரேஷ்வரி (62) உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுடன் இன்று காலை திருச்செந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து, நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த பழனிசாமியின் மனைவி சங்கரேஷ்வரி, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த  ஆதிநாராயணன் மனைவி மருதாயி (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பழனிசாமி, அவரது  மகன் கனக தர்மராஜ், மருமகள் முத்துலட்சுமி கனக தர்மராஜ் (40), அவரது மனைவி முத்துலட்சுமி (35), அவரது குழந்தைகள் ஓவியாஸ்ரீ (10), நிவித் குரு (7), கார் டிரைவர் சங்கர் (38) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிசிக்கை பலனின்றி டிரைவர் சங்கர். விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory