» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)



பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன்  முன்னிலையில் இன்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சிலோன் காலனி இ-சேவை மையத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கடந்த ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டத்தின் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் மீது ஆய்வு செய்தார். 

தொடர்ந்து சிலோன் காலனி வழியே செல்லும், உயர் மின்னழுத்த மின் கம்பி செல்லும் இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சியில் ரேஷன் கடை, சமுதாய நலக்கூடத்தை ஆய்வு செய்தார். மேலும் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில், கட்டபொம்மனின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் ஒலி ஒளி காட்சி அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜன், வட்டாட்சியர் நிஷாந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாண்டியராஜன், ஊராட்சி மன்ற தலைவர் கமலாதேவியோகராஜ், செயலர் சுப்பிரமணியன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory