» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: கோவில், பள்ளிவாசல் இடிப்பு - பரபரப்பு!

சனி 18, டிசம்பர் 2021 10:31:56 AM (IST)



தூத்துக்குடியில் கோவில் மற்றும் பள்ளிவாசல் கொடிமரத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஸ்டேட் பாங்க் காலனி முதல் திரேஸ்புரம் கடற்கரை வரையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் திரேஸ்புரம் பகுதியில்  இராஜேஸ்வரி அம்மாள் கோவில், மற்றும் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் கொடிமரம் ஆகியவை ஆக்கிரமிப்பில் இருப்பதாக சம்பந்தப்பட்ட கோவில் மற்றும் மசூதி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரங்காதன், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ஸ்டான்லி பாக்கியநாதன், கிராம நிர்வாக அதிகாரி ராதா மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் ஜேசிபி எந்திரங்கள் மூலம் கோவில் மற்றும் பள்ளிவாசல் கொடிமரம் இடிக்கப்பட்டது. 



முன்னதாக வழிபாட்டு தலங்களை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து டிஎஸ்பி சம்பத் தலைமையில் வடபாகம் இன்ஸ்பெக்டர் ரவி விஜின் ஜோன்ஸ் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  


மக்கள் கருத்து

பெ.ராமர்Dec 19, 2021 - 02:54:12 PM | Posted IP 173.2*****

இடையூராக அமைக்கப்படும் எல்லாவற்றையும் அப்புறப்படுதுவதே சரியாக இருக்கும். மேலும் தூத்துக்குடியில் ஷ்மார்ட் சிட்டிக்காக அமைக்கப்படும் வாறுகால் / வடிகால்களில் 85 சதம் ஆக்கிறமிக்கப்பட்டுள்ளது. ரோடுகளின் ஓரங்களில் உள்ள இந்த வாறுகால் / வடிகால்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரவேண்டும் என எதிர்பார்க்கிறோம் - நிறைவேற்றுமா தூத்துக்குடி மாநாராட்சி ???

ராஜ்Dec 19, 2021 - 10:02:32 AM | Posted IP 162.1*****

பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களும்.ஒத்துழைப்பு தர வேண்டும்.

ஆத்திDec 18, 2021 - 11:01:27 PM | Posted IP 108.1*****

இதனைப்போல மேலும் பல வழிபாட்டுத் தலங்கள் இடையூறாக உள்ளன.அவற்றையும் அகற்றவேண்டும். சேதுசமுத்திரத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கும் தடையாக உள்ள இடையூறுகள் அகற்றப்படவேண்டும்

Thangamani.ADec 18, 2021 - 07:10:26 PM | Posted IP 173.2*****

மிக சரியான நடவடிக்கை தொடரட்டும் துப்புரவு பணி.

சிவகுமார் சிDec 18, 2021 - 06:29:54 PM | Posted IP 173.2*****

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தெருக்களில் ஆக்கிரமிப்பு அனைத்து கிராமப் புறங்களில் உள்ள ஆக்கிரமிப்பு சாலைகளில் முழு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் சிமிண்ட் மூடை உயரத்தில் உள்ள பல வேகத்தடைகளைதேவையற்ற மெயின் ரோட்டில் உள்ளவேகத்தடைகளை அகற்ற வேண்டும்

RAJKUMARDec 18, 2021 - 06:08:05 PM | Posted IP 108.1*****

NEENGALE STATUS POTTU KIDUVEENGALO

RAJKUMARDec 18, 2021 - 06:07:21 PM | Posted IP 162.1*****

piraku ethuku web site

RAJKUMARDec 18, 2021 - 06:07:03 PM | Posted IP 162.1*****

ORU STATUS PODA vita mattingala da

RAJKUMARDec 18, 2021 - 06:06:20 PM | Posted IP 162.1*****

IDIRUKURATHU SARI RODU PODUNGAGADA

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory