» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேல் ஒரு தீய நாடு; மனிதகுலத்திற்கே சாபக்கேடு : பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 12:06:44 PM (IST)

இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடைபெற உள்ள நிலையில், இஸ்ரேல் ஒரு தீய நாடு, மனிதகுலத்திற்கே ஒரு சாபம் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. 

இன்று (ஏப்ரல் 10) ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இஸ்ரேல் குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகி உள்ளது. ஈரான் 2 வார போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டபோதும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

நேற்று முன் தினம் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 254 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும் காசாவில் போர் நிறுத்தம் இருந்தபோதும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு அத்தியாவசிய பொருட்கள் சென்று சேர்வதற்கான பாதைகளை மூடியுள்ளது.

இந்த சூழலில் இஸ்ரேல் குறித்து அமைச்சர் ஆசிப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், "இஸ்ரேல் ஒரு தீய நாடு, மனிதகுலத்திற்கே ஒரு சாபம். பாலஸ்தீனப் பிரதேசத்தில் இந்தப் புற்றுநோய் போன்ற அரசை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிய வேண்டும். காசா மற்றும் ஈரானுக்குப் பிறகு, இஸ்ரேல் இப்போது லெபனானிலும் ரத்தக்களரியை ஏற்படுத்தி வருகிறது" என்று சாடினார்.

ஆசிப்பின் கருத்துக்களை இஸ்ரேல் கடுமையாகக் கண்டித்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், "அமைதிக்குத் தரகர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நாட்டிலிருந்து வரும் இத்தகைய கருத்துக்கள் பொறுத்துக்கொள்ளப்படாது" என்றும் கூறியுள்ளது. இவை யூத-விரோதக் கருத்துக்கள் என்றும், தங்கள் நாட்டை அழிக்கக் கோரும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்று வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து

தேசபக்தன் ஒருவன்Apr 10, 2026 - 04:32:22 PM | Posted IP 104.2*****

அடுத்த குட்டி நாடு இஸ்ரேல் மீது ராக்கெட், ஏவுகணைகளை வீசினால் சும்மாவா இருப்பான், 100 மடங்கு பலத்த அடி திருப்பி தருவான் இஸ்ரேல்காரன். உலகில் இஸ்லாமிய தீவிரவாதிகள் எல்லாம் இஸ்ரேல் ராணுவ படைகளை கண்டால் கதறுவார்கள். இன்று பாகிஸ்தான் வரை கேட்டுச்சோ கதறல் ஆரம்பம். ஜெய் இஸ்ரேல்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory