» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா மீதான வரி 18% ஆக குறைப்பு: வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அறிவிப்பு!

செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:09:26 PM (IST)


இந்தியா மீதான இறக்குமதி வரியை 18% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் மோடியின் பதிவில் வர்த்தக ஒப்பந்தம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதாகவும் அதன் கீழ் இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவிகிதத்திலிருந்து 18 சதிவிகிதமாக குறைப்பதாகவும் தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்திருந்தார் டிரம்ப்.

"இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீதான வரி 18% ஆக குறைக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி," என பிரதமர் மோதி தெரிவித்திருந்தார்.எனினும், இந்த அறிவிப்புக்குப் பிறகு "மோதி மீதான டிரம்பின் அழுத்தம் தெளிவாக தெரிகிறது," என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் பல முறை கூறியதைப் போல, பிரதமர் மோதியை ஒரு சிறந்த நண்பராக டிரம்ப் கருதுகிறார். வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பால் நான் உற்சாகமாக இருக்கிறேன். அமெரிக்கா-இந்தியா உறவில் நிறைய திறன் உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே உறவு பல ஏற்றஇறக்கங்களைச் சந்தித்த நிலையில் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory