» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு அமெரிக்காவில் முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளை தர தயார்: புதின்
வியாழன் 22, ஜனவரி 2026 11:34:49 AM (IST)

போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட உக்ரைனின் மறுகட்டமைப்பு பணிகளுக்கு, அமெரிக்காவில் முடக்கி வைக்கப்பட்டு உள்ள ரஷிய சொத்துகளை தருவதற்கு தயார் என புதின் கூறியுள்ளார்.
உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் எதிரொலியாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர்.
போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் முயற்சியில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட உக்ரைனின் மறுகட்டமைப்பு பணிகளுக்கு, அமெரிக்காவில் முடக்கி வைக்கப்பட்டு உள்ள ரஷிய சொத்துகளை தருவதற்கு தயார் என புதின் கூறியுள்ளார்.

புதினை, டிரம்ப் அரசில் சிறப்பு தூதர்களாக செயல்பட்டு வரும் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இன்று சந்தித்து உக்ரைன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், ரஷிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புதின் நேற்றிரவு பேசும்போது, காசா போர்நிறுத்த ஒப்பந்த திட்டம் தொடர்பான டிரம்ப்பின் அமைதி வாரியத்திற்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை (ரூ.9,161 கோடி) ரஷியா நன்கொடையாக வழங்கும் என கூறினார். அமெரிக்காவில் முடக்கி வைக்கப்பட்டு உள்ள ரஷிய சொத்துகளில் இருந்து அவை வழங்கப்படும்.
இந்த சொத்துகளில் கிடைக்கும் மீத தொகையை கொண்டு, போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும். இதற்கான சாத்தியங்கள் தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் கூறினார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா மீதான வரி 18% ஆக குறைப்பு: வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:09:26 PM (IST)

தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் எதிர்ப்பு!
திங்கள் 2, பிப்ரவரி 2026 5:10:09 PM (IST)

ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 2, பிப்ரவரி 2026 4:34:29 PM (IST)

சீனாவுடனான வர்த்தக உறவால் பிரிட்டனுக்குப் பெரும் லாபம் : பிரதமர் கியர் ஸ்டார்மர்
சனி 31, ஜனவரி 2026 11:59:49 AM (IST)

தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு!
சனி 31, ஜனவரி 2026 10:56:34 AM (IST)

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரிட்டனுக்கு மிகவும் ஆபத்தானது: ட்ரம்ப் எதிர்ப்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 4:35:32 PM (IST)