» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்

திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)



மைக்ரோசாப்ட் உரிமையாளரான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார். 

மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவகாரத்து ஆகஸ்ட் 2021 இல் இறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

2000-ம் ஆண்டு, 'பில் & மெலிண்டா கேட்ஸ்' அறக்கட்டளை என்ற பெயரில், பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து, ஒரு தனி அறக்கட்டளையை நிறுவினர். இந்த அறக்கட்டளையில் ஆரம்ப சுகாதாரம், கல்வி மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்போது வரை இந்த அறக்கட்டளை தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

இந்தநிலையில், மைக்ரோசாப்ட் உரிமையாளரான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார். 2021ல் ஒப்புக்கொண்ட விவாகரத்து ஒப்பந்தப்படி ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டிருந்தார் பில்கேட்ஸ். ஏற்கனவே ரூ.41,700 கோடியை மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் வழங்கிய நிலையில், இறுதியாக தற்போது ரூ.71,100 கோடி வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory